சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினை வெளியீடு

வரும் 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினை (LOGO) இன்று ஆன்லைனில் வெளியிட்டார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். இலட்சினை (LOGO) வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலே பல லட்சக்கணக்கான வன்னிய இளைஞர்கள் இந்த இலட்சினை (LOGO) அவர்களது சமூக ஊடக பக்கங்களில் சுயவிவரப் படமாக மாற்றி உள்ளதை பார்க்க முடிகிறது. மாநாட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கொட்டும் மழையிலும் மாநாட்டுப் பணியில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகம் எங்கும் வாழும் வன்னிய சொந்தங்கள் அனைவரும் வருகின்ற மே 11 சித்திரை முழு நிலவு நாளன்று மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்று கூடுவோம் மாபெரும் வெற்றி மாநாடாக மாற்றிக் காட்டுவோம்

Read More